மனித உறுப்பு மண்டலங்கள் : எலும்பு மண்டலம் மற்றும் தசை மண்டலம் (பொது அறிவியல் : TNPSC, RRB மற்றும் SSC தேர்வுகள்)

மனித உறுப்பு மண்டலங்கள்

    ஒரு உயிரினத்தின் அடிப்படை அலகு செல் ஆகும். செல்கள் ஒருங்கிணைந்து திசுக்கள் உருவாகிறது. திசுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து உறுப்புகளாகவும், உறுப்புகள் எல்லாம் இணைந்து உறுப்பு மண்டலங்களாகவும் உருவாகிறது. உறுப்பு மண்டலங்கள் சேர்ந்து முழு உயிரினமாக உருவாகின்றது. உறுப்புகள் எல்லாம் ஒருங்கிணைந்து ஒரு குறிப்பிட்ட பணியை செய்தலே உறுப்பு மண்டலம் எனப்படும்.


நமது உடலிலுள்ள உறுப்பு மண்டலங்கள்:

    1. புறச்சட்டக மண்டலம் (தோல் மற்றும் தோல் சுரப்பிகள் )
    2.  எலும்பு மண்டலம்
    3.  தசை மண்டலம் 
    4.  செரிமான மண்டலம்
    5.  சுவாச மண்டலம் 
    6.  இரத்த ஓட்ட மண்டலம் 
    7.  நரம்பு மண்டலம்
    8.  நாளமில்லா சுரப்பி மண்டலம்
    9.  இனப்பெருக்க மண்டலம்
    10.  கழிவு நீக்க மண்டலம்

எலும்பு மண்டலம்(Skeletal System):

Human Skeletal System - General Science


    எலும்பு மண்டலமானது எலும்புகள், குருத்தெலும்புகள் மற்றும் மூட்டுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. தசைகள் இணைக்கப்படுவதற்கு ஏற்ற பகுதியாக எலும்புகள் திகழ்கின்றன. நடத்தல், ஓடுதல், மெல்லுதல் போன்ற செயல்களுக்கு எலும்பு மண்டலம் உதவுகின்றது.

    மனிதனின் எலும்பு மண்டலத்தில் 206 எலும்புகள் உள்ளன. குழந்தைகள் பிறக்கும் பொழுது 300க்கும் அதிகமான எலும்புகளுடன் பிறக்கின்றன. அவர்கள் வளரும் பொழுது சில எலும்புகள் இணைந்து ஒன்றாகி விடுகின்றன.  சில குருத்தெலும்புகள், இணைப்பு இழைகள், தசை நார்கள் ஆகியவற்றையும் எலும்பு மண்டலம் உள்ளடக்கியுள்ளது. இணைப்பு இழைகள் எலும்புகளை எலும்புகளுடன் இணைக்கின்றது. தசை நார்கள் எலும்புகளை தசைகளுடன் இணைக்கின்றது.

எலும்பு மண்டலம் 2 பிரிவுகளை கொண்டுள்ளது.
அவை, 
  1.  அச்சு சட்டகம்
  2.  இணை உறுப்புச் சட்டகம்

அச்சு சட்டகம்:

செங்குத்தான அச்சை உருவாக்குகின்றது . மண்டையோடு முதுகெலும்புத்தொடர்  மற்றும் விலா எலும்புக்கூடு. 

மண்டை ஓடு 

Human Skull - Skeletal System
  • மண்டையோட்டில் மண்டையோட்டு எலும்புகள், முக எலும்புகள் உள்ளன. இவை மூளை, முகத்தில் உள்ளமைப்பைப் பாதுகாக்கின்றன.
  • வாய் குழியின் அடித்தளத்தில் காணப்படும் ஹயாய்டு எலும்பு மற்றும் செவி சிற்றெலும்புகளான சுத்தி எலும்பு, பட்டை எலும்பு மற்றும் அங்கவடி எலும்புகளும் மண்டையோட்டில் அடங்கும்.
  • மனிதர்களின் முகத்திலேயே கீழ் தாடை எலும்பு தான் மிகப்பெரியது மற்றும் உறுதியானது 

முதுகெலும்பு தொடர்:

Human Spinal Cord - Skeletal System

  • மண்டையோட்டின் அடிபுறத்திலிருந்து தொடங்குகிறது.
  • இது தண்டுவடத்தை பாதுகாக்கின்றது. சிறிய முள்ளெலும்புத் தொடர்களால் ஆனது.

விலா எலும்புக்கூடு: 

  • 12 இணை விலா எலும்புகளைக் கொண்டுள்ளது.
  • இதயம், நுரையீரல் போன்ற இன்றியமையாத உடல் உறுப்புகளைப் பாதுகாக்கின்றது. 

இணை உறுப்புச் சட்டகம்: 

  • மார்பு வளையங்கள், இடுப்பு வளையங்கள்  மற்றும் கை, கால் எலும்புகள் 

கை மற்றும் கால் எலும்புகள்: 

மனிதனின் கை, கால் எலும்புகள் இரண்டு இணைகளைக் கொண்டவை.
அவை,
  1. முன்னங்கை : எழுதுதல், பிடித்தல் போன்ற செயல்கள்
  2. பின்னங்கால்: ஓடுதல், அமர்வது மற்றும் நடத்தல் போன்ற செயல்கள்

எலும்பு வளையம் :


Human Pelvis - Skeletal System


அச்சு சட்டக்கத்துடன் முன்னங்கைகளையும், பின்னங்கால்களையும் இணைப்பதற்கு மார்பு வளையம் மற்றும் இடுப்பு வளையம் உதவுகின்றது.
Human Rib Cage - Skeletal System

நமது உடலில் காணப்படும் எலும்புகளில்,
  • மிகச் சிறியது காதின் உள்பகுதியில் உள்ள அங்கவடி எலும்பு ஆகும். இது 2.8 mm நீளமுடையது 
  • மிகப்பெரியது தொடை எலும்பு 

தசை மண்டலம் (Muscular System)

Human Muscular System (General Science )

  • நமது உடலில் உள்ள எலும்பு மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்துடன் சேர்ந்து தசை மண்டலமும் உடல் அசைவிற்கு உதவுகின்றது.
  • சுருங்கி விரியும் தன்மை கொண்டவை.
  • தசைகள் உடலை சரியான நிலையில் வைத்திருக்கவும், உடல் நிலைப்பாட்டை பராமரித்து கொள்ளவும் உதவுகின்றன. 
  • உடலில் மூன்று வகை தசைகள் உள்ளன.
அவையாவன, 
    1. எலும்பு தசைகள் 
    2.  மென் தசைகள்
    3.  இதய தசைகள் 

 எலும்பு தசைகள்:

  • நமது உடலில் உள்ள எலும்புகளுடன் இணைந்து செயல்பட கூடியவை.
  • நமது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுவதால் இவை இயக்கு தசைகள் என்கின்றோம்.
  • எடுத்துக்காட்டு: கைகளில் உள்ள தசைகள்

மென் தசைகள்:

  • மென் தசைகள் உணவுக் குழல், சிறுநீர்ப்பை, தமனிகள் மற்றும் பிற உள் உறுப்புகளின் சுவர்களில் காணப்படுகிறது.
  • இவை நம் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படாதவை எனவே "கட்டுப்படாத இயங்கு தசைகள்" என்று அழைக்கப்படுகின்றன.

இதய தசைகள்:

  • இதயத்தின் சுவர் இதய தசைகளால் ஆனது.
  • இவை சீராகவும், தொடர்ச்சியாகவும் இதயத்தை துடிக்க வைக்கின்றன.
  • இவை விருப்பத்திற்கு ஏற்ப கட்டுப்படாத இயங்கு தசைகள் ஆகும்

தசைகளின் இயக்கம்:

  •  தசைகளால் தள்ள இயலாது.
  • இழுத்துக் கொள்ள மட்டுமே இயலும்.
  • மூட்டுகளில் எலும்புகளை அசைவிக்க இரு தசைகள் தேவைப்படுகிறது. ஒரு தசை சுருங்கும் போது மற்றொன்று விரிவடைகின்றது. 
எடுத்துக்காட்டு:
Human arm muscle - Muscular System
    • முன்னங்கையை மேலும் கீழும் அசைவிக்க இருதலை தசை, முத்தலை தசை என இரு வகை தசைகள் தேவைப்படுகின்றன.
    • முன்னங்கையை தூக்கி உயர்த்தும்பொழுது இருதலை தசை சுருங்கி முத்தலை தசை விரிவடைகிறது.
    • முன்னங்கையை கீழ இறக்கும்போது இருதலை தசை விரிந்து முத்தலை தசை சுருங்குகின்றது. 
  • இருதலை தசை: முழங்கையினை மடக்குதல் 
  • முத்தலை தசை: முழங்கையினை நீட்டுதல்





Resource:

  • Tamil Nadu School Samacheer Books Standard 6th to 12th. 



"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"



No comments:

Post a Comment